மருத்துவ குறிப்பு

சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்.

எதனால் சோர்வு ஏற்படுகிறது? என தெரிந்துகொண்டு சோர்வில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழ சில வழிகள் உண்டு…

சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்..
எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல். வெற்றி அடையத் துடிக்கும் உங்களுக்கு சோம்பல்தான் கடுமையான எதிரி. சோம்பல் மனதிற்குள் நுழைந்துவிட்டால் காலமெல்லாம் அதனுடைய பிடியிலிருந்து மீள்வது கடினம். எனக்கு சந்தர்ப்பம் இல்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை, என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் சோம்பலாக காலத்தைக் வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது அடுத்தவர்கள் நீங்கள் புறம்தள்ளிய சந்தர்ப்பங்களை தனதாக்கிக் கொண்டு, உங்களை எளிதில் வென்றுவிடுவார்கள்.

சோர்வு :

சோம்பல் ஒரு பழக்கம். மனதில் சோம்பல் படிந்து விட்டால் நீக்குவது மிகமிகக் கடினம். சோம்பலற்று இருக்க இளம் வயதிலேயே பழக வேண்டும். முதன்மையாய் வருவது, புகழ் பெறுவது, பிறரால் பாராட்டப்படுவது போன்றவைகளில் ஆர்வம் இருக்க வேண்டும். சோம்பல் பழக்கமானால், தோல்வி பழக்கமாகும். தோற்றுப் போனதற்கு ஆயிரமாயிரம் சமாதானங்கள் சொல்லத் தோன்றும். அதிர்ஷ்டமில்லை என்றும், இந்தத் தேர்வு முறையே தவறு என்றும் சொல்லத் தோன்றும்.

சோர்வு என்ற ஒன்று பலரையும் தொற்றி, எதையும் நிம்மதியாக செய்யவிடாமல் தடுக்கிறது. எதனால் சோர்வு ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபடுவது எப்படி? என தெரிந்துகொண்டு சோர்வில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழ சில வழிகள் உண்டு…

சோர்வுக்கான காரணங்கள் :

வேலை, பயணம், வயது போன்றவற்றுடன், ஒருசில ஆரோக்கிய பிரச்சினைகளான நீரிழிவு, இதய நோய், தைராய்டு போன்றவைகளும் சோர்வுடன் இருப்பதற்கான காரணங்களாகும். சோம்பல் வரும்போது எறும்பு, தேனீ ஆகியவற்றை நினைவில் நிறுத்துங்கள். சோம்பல் பறந்துபோகும். ஒரு கப் தேநீர், குளிர்பானம் ஏதாவது அருந்துங்கள். உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.

உடற்பயிற்சி :

தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். எனவே நடைப்பயிற்சி, ஓட்டம், யோகா, சைக்கிள் பயிற்சி என உங்களால் முடிந்த சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள்.

சரியாக தூக்கம் இல்லையென்றால் சோர்வை உண்டாக்குவதோடு, ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே தினமும் சரியான அளவு தூங்க வேண்டும். ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும். சிலர் தங்கள் களைப்பு போக வேண்டும் என்று நீண்ட நேரம் தூங்க முயற்சிப்பார்கள்.

புத்துணர்ச்சி பெற எட்டு மணி நேரம் தூக்கம் போதுமானது. அதற்கு பதில் 10 மணி நேரம் தூங்கினால் களைப்பு போகாது, மேலும் களைப்புதான் ஏற்படும். ஆகவே அளவான தூக்கமே உடலுக்கு நல்லது. இரவில் நேரத்துக்கு உறங்கச்சென்று காலையில் நேரத்துடன் எழும்புங்கள். எந்த வேலையையும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க, உடற்பயிற்சியை செய்து வாருங்கள். அதுமட்டுமின்றி காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவுதான் மிகவும் முக்கியமானது. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியத்தை தரும் உணவுகளை சாப்பிடுங்கள். இதனால் நன்கு தூக்கம் வருவதுடன், ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் என்றும் நீடிக்கும்! 201611240718417323 active live laziness SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button