201611251208195616 how to make Garlic Soup SECVPF
சூப் வகைகள்

வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்

வயிற்று உபாதைகளால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு சூப்பை வாரம் இருமுறை குடித்து வரலாம். இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்
தேவையான பொருட்கள் :

பூண்டுப் பற்கள் – 10
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லி இலை – சிறிது
புதினா – சிறிது
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்றவாறு

செய்முறை :

* இஞ்சி, கொத்துமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

* ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.

* பின்னர் சுட்ட பூண்டு, 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

* பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும்.

* அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க விடவும்.

* தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.

* உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலை ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.

* ரொட்டித் துண்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.201611251208195616 how to make Garlic Soup SECVPF

Related posts

நூல்கோல் சூப்

nathan

முருங்கை கீரை சூப்

nathan

பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப்

nathan

மிளகு ரசம்

nathan

உடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்

nathan

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

nathan

சத்து நிறைந்த காய்கறி சூப்

nathan

பத்து நிமிட காய்கறி சூப்

nathan