அசைவ வகைகள்

மட்டன் கொழுப்பு கறி செய்வது எப்படி

சிலருக்கு மட்டன் கொழுப்பு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கான மட்டன் கொழுப்பு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மட்டன் கொழுப்பு கறி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மட்டன் கொழுப்பு – 100 கிராம்
சின்னவெங்காயம் – 10
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மட்டன் கொழுப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் அல்லது கொழுப்பு வேகும்வரை வேகவிட்டு இறக்கவும்.

* கொழுப்பு மட்டுமே சேர்த்து செய்யும் இந்தக் கறி, சுவையாக இருக்கும். இட்லியுடன் பரிமாறவும்.

குறிப்பு :

* கொழுப்பில் இருந்து அதிகம் எண்ணெய் பிரியும் என்பதால், தாளிக்க குறைந்த அளவு எண்ணெய் சேர்த்தால் போதும்.

* வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த குழம்பை சாப்பிட வேண்டாம்.201611280941261977 how to make mutton Fat curry SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button