முகப் பராமரிப்பு

முகப்பருக்களை வராமல் தடுப்பது எப்படி?

முகத்தில் எந்தக் க்ரீம் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதில் தூசு சுலபமாக ஒட்டிக்கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும்.

தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனம் அடிக்கடி பூசினால் எண்ணெய் சுரப்பது கட்டுப்படும்.

அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று

தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. இவ்வாறு செய்தால் முகப்பருக்கள் உங்கள் சருமத்தை நெருங்காது.

ஆவி பிடித்தல் எண்ணெய் சருமம் மற்றும் முகப்பரு இருப்பவர்கள் வாரம் இருமுறை வெந்நீரில் மஞ்சள் கலந்து ஆவி பிடிப்பது நல்லது. இது அருமையான பலன் தரும். இதனால்

கிருமிகள் அழுக்குகள் சரும துளைகளின் மூலம் வெளியேறிவிடும். ரத்தம் தூண்டப்படும். முகப்பருக்கள் எட்டியும் பாக்காது.

முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் மற்றும் க்ரீம் பூசுவது நல்லதல்ல. இதனால் முகப்பருக்கள் உண்டாக வழிவகுக்கும்.

எந்நேரமும் கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு பருக்களை விரல்களால் நோண்டுவதை முதலில் கைவிடுங்கள். பருக்களிலிருந்து பிதுக்காதீர்கள். இவை அதிகமாக பரவ வழிவகுக்கும்.

உணவுமுறை : நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய்,

வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி உணவு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, எண்ணெய் பலகாரம் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.

ஹெல்மெட் மற்றும் சட்டையின் காலரை இறுக்கமாக அணியாதீர்கள். இந்த வழிமுறைகளால் முகப்பருக்கள் வருடக் கணக்கில் நீடிப்பதைக் கட்டுப்படுத்தலாம்

பருக்களைப் போக்க : ரோஸ்வாட்டர் : சருமத்தை கிளின்சிங் செய்வதற்கு சிறந்தது ரோஸ்வாட்டர் தான். அதிலும் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம்

ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் பருக்கள் போய்விடும்.

முக அழகைக் கெடுக்கும் பருக்களைப் போக்குவதற்கு, க்ரீன் டீயும் ஒன்று. க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, எளிதில் நீங்கிவிடும்..

pinching 25 1469441734

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button