எடை குறைய

இடை மெலிய 2 எளிய உடற்பயிற்சிகள்

உடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் அதிகரிக்கும் சதையை குறைக்கும் எளிய 2 உடற்பயிற்சிகளை கீழே பார்க்கலாம்.

இடை மெலிய 2 எளிய உடற்பயிற்சிகள்
உடலை வளைத்து வேலை செய்வது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. விளைவு உடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் தசைகள் அதிகரித்து அழகைக் கெடுத்துவிடுகிறது. தசைகளைக் கரைக்கக்கூடிய சில எளிமையான பயிற்சிகளை கீழே பார்க்கலாம்.

ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் (Hip twister Stick Workouts) :

இந்தப் பயிற்சியைச் செய்பவர்கள், அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியைப் பயன்படுத்த வேண்டும்.

* இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தபடி நிற்கவும். வலது கை, வலது காலைத் தொடுவதுபோல் வளைத்து, திரும்பவும் பழைய நிலைக்கு வரவும். இதுபோல் 20 முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 20 முறை செய்யவேண்டும்.

* இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தபடி நிற்கவும். இடது காலை முன்னால் வைத்து, வலது கையை குச்சியுடன் சேர்த்து முன்னால் கொண்டு வரவும். இதுபோல் 20 முறை இடது மற்றும் வலது என இருபுறமும் செய்யவும்.

பலன்கள்: இடுப்புப் பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறையும். இடுப்பு நரம்புகள் வலுவடையும். இடுப்புப் பகுதியின் பக்கவாட்டுத் தசைகள் கரைந்து, வயிறும் இடையும் மெலிந்துவிடும்.

சைடு வே ஹேண்ட் ஸ்ட்ரெச்சிங் (Side Way Hand Stretching) :

கால்களை அகலமாக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியபடி வலது கையின் மணிக்கட்டுப் பகுதியை, இடது கையால் இறுகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இரண்டு கைகளும் காது பகுதியை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.

மூச்சை அடி வயிறு வரை இழுத்து வலது மற்றும் இடது புறம் கையை முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டும்.

பலன்கள்: உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் வலுவடையும். அடி வயிற்றின் தசைப் பகுதியில் உள்ள தேவையற்ற தசைகளைக் கரைத்துவிடும். 201612021229213845 2 Simple Exercises for hip reduce SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button