முகப் பராமரிப்பு

எந்த வித சருமத்திலும் முக அழகை பராமரிப்பது எப்படி ?

சருமத்தை பராமரிப்பதும் ஒரு கலைதான். சிலருக்கு இயற்கையிலேயே அழகான சருமத்தை பெற்றிருப்பார்கள். ஆனா என்னதான் இயற்கை அளித்தாலும் நாம் பராமரிக்கும் விதத்தில்தான் அழகு புத்துணர்வு பெறும். அப்படி எவ்வாறு உங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து படியுங்கள்.

முகத்தில் உள்ள தழும்புகள் மறைய : இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் கருத்துப் போகாமல் இருக்கும்.

வறண்ட சருமத்திற்கு : வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

எண்ணய் சருமத்திற்கு : தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால்எண்ணெய் சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

முகச்சுருக்கங்கள் போக்க : முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வர முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
dryskin 26 1469528022

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button