30.6 C
Chennai
Saturday, Jul 27, 2024
27 1469605251 2 lemoncvr
முகப் பராமரிப்பு

ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்கும் அற்புத வழிகள்!

சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முகத்தில் ப்ரௌன் நிறத்தில் புள்ளிகள் இருக்கும். இவை அழகைக் கெடுக்கும் வண்ணம் இருப்பதால், பலர் இதனைப் போக்க கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். பொதுவாக இம்மாதிரியான புள்ளிகள் அதிகப்படியான மெலனின் உற்பத்தியால் ஏற்படுபவை.

மெலனின் உற்பத்தியானது அதிகப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அதிகப்படியான சூரியக்கதிர்களின் தாக்கம், கர்ப்பம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், வைட்டமின் குறைபாடுகள், தூக்கமின்மை, மன அழுத்தம், வயது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

அழகைக் கெடுக்கும் இந்த ப்ரௌன் நிற புள்ளிகளை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் போக்கலாம். கீழே அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

கற்றாழை கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக முகத்தில் இருக்கும் ப்ரௌன் நிற புள்ளிகளை வேகமாக மறைக்கக்கூடியது. அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ப்ரௌன் நிற புள்ளிகள் விரைவில் நீங்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். மேலும் இதில் உள்ள அசிட்டிக் தன்மை, ப்ளீச்சிங் போன்று செயல்படுவதால், முகத்தில் இருக்கும் ப்ரௌன் நிற தழும்புகள் வேகமாக மறையும். அதற்கு எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, காட்டன் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மோர் மோரில் லாக்டிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இது சருமத்தின் மெலனின் அளவைக் குறைக்கும். அதற்கு மோரில் சிறிது தேன் கலந்து, தினமும் முகத்தில் தடவி நன்கு 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

தக்காளி தக்காளியில் உள்ள அமிலத்தன்மை, சருமத்தில் இருக்கும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்கும். அதற்கு தக்காளி சாற்றினை தினமும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் ஓட்ஸ் ஒரு நல்ல ஸ்கரப். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வெளிக்காட்ட உதவும். அதற்கு ஓட்ஸை பொடி செய்து, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, நன்கு உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சர்க்கரை சர்க்கரையில் க்ளைகோலிக் அமிலம் ஏராளமாக உள்ளது. அத்தகைய சர்க்கரையை தண்ணீர் சேர்த்து முகத்தில் தாடவி மென்மையாக ஸ்கரப் செய்ய, சருமத்தில் இருக்கும் இறந்த தோல்கள் முழுமையாக வெளியேறிவிடும்.

27 1469605251 2 lemoncvr

Related posts

தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்

nathan

சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா?

nathan

பியூட்டி பார்லர்” போகாமலேயே முகம் பொலிவு பெற

nathan

உங்க கண்கள் அனைவரையும் ஈர்க்க வேண்டுமா…?இதை முயன்று பாருங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளையங்களைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan

சருமத்திற்கு குளுமை தரும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்

nathan

5 நிமிடத்தில் முகத்திற்கு பொலிவு தரும் வாழைப்பழம் !!

nathan

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் முகப்பரு…..

sangika