சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா

மாலை நேரத்தில் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா
தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு – 4
பாசிப்பருப்பு – கால் கப்
அரிசி மாவு – 3 ஸ்பூன் (வறுத்தது)
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் -2
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை எடுத்து விட்டு மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை துருவி வைத்து கொள்ளவும்.

* பாசிப்பருப்பை நன்றாக ஊற வைத்து கழுவி மிக்கியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த பாசிப்பருப்பு, மசிந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, அரிசி மாவு, கொத்தமல்லி, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பதமாக கலந்து சிறிய உருண்டையாக உருட்டி வைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.

* மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா தயார்.

* இந்த உருளைக்கிழங்கு போண்டாவை மாலை நேரத்தில் புதினா சட்னி, தேங்காய் சட்னியோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.201612071533350209 evening snacks potato bonda Aloo bonda SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button