மருத்துவ குறிப்பு

மூட்டுத் தேய்மானமா? இதோ தீர்வு

எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை மூட்டுத் தேய்மானம்.
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் மூட்டுத்தேய்மானம் ஏற்படுகிறது.
போதுமான ஊட்டச்சத்து இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.
சித்த மருத்துவத்தில் இந்த மூட்டுத் தேய்மானத்துக்குச் சிறந்த மருந்துகள் உள்ளன, அதில் அத்திப்பழம் மிகச்சிறந்த மருந்து.
இதில் கால்சியம் மற்றும் புரதச்சத்து மிக அளவில் இருக்கிறது.

மருத்துவம்
அத்திப்பழம் – 5
அரச விதை – 10 கிராம்
ஆல விதை – 10 கிராம்
பூசணி விதை – 10 கிராம்
தேன் – 1/4 கிலோ
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கொஞ்சம் தேன் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
மீதியுள்ள தேனை நன்கு காய்ச்சவும் பொங்கிவரும் நுரையை நீக்கிவிட்டு அதில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும், சரியான பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
இதை காலை மாலை இருவேளையும் தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டுத்தேய்மானம் குணமாகும்.
மேலும், உடல் பலவீனத்தால் ஏற்படும் வலி மற்றும் வேதனை குறையும்.

Related posts

வாய்ப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய் தீநீர்

nathan

சளி இருமலை போக்கும் தூதுவளை!

nathan

முப்பது வயதில் கர்ப்பமாக இருபது வயதிலேயே இதை எல்லாம் செய்ய வேண்டும்

nathan