மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்து கொள்ளலாமா என்ற சந்தேகம் உள்ளது. அதற்கான விடையை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில் உங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படலாம். அதில் ஒன்று நீங்கள் உட்கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகளைப் பற்றியதாக இருக்கலாம். ஆன்டி பயாடிக் மாத்திரைகளைப் பற்றிய உண்மைகளை விரிவாக பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் உடல் பாகங்கள் வீக்கம், மலச்சிக்கல், முதுகு வலி, உடல் எடை அதிகரிப்பு, போன்ற பல்வேறு விரும்பத்தகாத பிரச்சனைகளால் அவதிப்படுகின்றார்கள். மேலே தெரிவித்துள்ள உடல் பிரச்சனைகளைத் தவிர்த்து கர்ப்பிணிப் பெண்கள் பல்வேறு மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆட்படுகின்றனர். அவர்களுக்கு மன மாறுதல், எரிச்சல், கவலை போன்ற மனப்பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகள் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்றது.

பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், ஈஸ்ட் தொற்று, பாக்டீரியா தொற்று முதலிய நோய்களை குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் ஆன்டிபயாடிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. ஆன்டி பயாடிக் மருந்துகள் நம்முடைய உடலுக்குள் நுழைந்து நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழித்து அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுத்து வியாதிகளை குணப்படுத்துகின்றது.

கர்ப்பிணி பெண்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு பாக்டீரியா தொற்று, வைரஸ் காய்ச்சல், ஈஸ்ட் தொற்று போன்ற பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படலாம். சில நேரங்களில் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் அவற்றை குணப்படுத்த ஆன்டி பயாடிக் மருந்துகள் தேவைப்படலாம். அத்தகைய சந்தர்பங்களில் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகள் எடுத்தே ஆக வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதா?

ஒரு ஆய்வு கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருத்துகளை எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள், பிரசவத்திற்கு பின் ஆஸ்துமா பாதிப்பிற்கு அதிகம் ஆட்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றது. எனவே, உங்களுடைய கர்ப்ப காலதில் ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக்கொள்ளும்போது உங்களுடைய மருத்துவர்களின் ஆலோசனையை கண்டிப்பாக கேளுங்கள். தேவைப்பட்டால் ஆன்டி பயாடிக் மருந்துகளை மிகக் குறைந்த அளவே எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.

பொதுவாக கர்ப்பத்தின் மூன்று மாதத்திற்கு பிறகு ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது என கருதப்படுகின்றது. எனினும் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள கூடாது.201612101444212394 antibiotic medicine during pregnancy SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button