உடல் பயிற்சி

உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடவேண்டிய உணவுகள்

உடற்பயிற்சி செய்யும்போது அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை அறிந்திருப்பது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் கீழ்க்கண்ட உணவுகளை உண்ணலாம்.

உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடவேண்டிய உணவுகள்
இன்று மக்களுக்கு உடலை கச்சிதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதற்காக உடற்பயிற்சிக்கூடங்களை நோக்கி ஓடுகிறார்கள் அல்லது வீட்டில் ‘டிரெட் மில்’லில் ஓடுகிறார்கள்.

ஆனால் உடற்பயிற்சி செய்யும்போது அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக, உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது வெறும் வயிற்றில் இருக்கக் கூடாது.

பலரும் செய்யும் இந்தத் தவறை நீங்கள் தவிர்த்திடுங்கள். உடற்பயிற்சிக்கு முன் கீழ்க்கண்ட உணவுகளை உண்ணலாம்…

* தற்போது ஓட்ஸ், பரவலாக விரும்பி உண்ணப்படும் உணவாகி வருகிறது. ஓட்சில் நார்ச்சத்தும் புரதச்சத்தும் உள்ளன. இவை மெதுவாக ஆற்றலை வழங்கி, நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய உதவும்.

* வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்வதற்குத் தேவையான சக்தி கிடைப்பதோடு, தசைகள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.

* வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், ரிபோபிளேவின், செலினியம் ஆகியவை உள்ளன. இவை உடற்பயிற்சியின்போது வேண்டிய ஆற்றலை வழங்கும்.

* இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பொட்டாசியம், எளிதாக உடற்பயிற்சி செய்ய உதவும். மேலும் இவை உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும்.

* ‘அவகேடோ’ என்ற வெண்ணெய்ப் பழம், பழ அங்காடிகளில் கிடைக்கும். இந்த வெண்ணெய்ப் பழ மில்க் ஷேக்கை உடற்பயிற்சி செய்யும் முன் குடிப்பது மிகவும் நல்லது. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால், செய்யும் உடற்பயிற்சியின் முழு நன்மையையும் நாம் பெறலாம்.

* முழுத்தானிய உணவுகள், கொழுப்பு குறைந்த யோகர்ட், பழுப்பு அரிசி உணவுகள், பழங்கள், வேகவைத்த காய்கறிகள் சாப்பிடலாம். போதுமான தண்ணீர் அருந்த வேண்டும்.

* உடற்பயிற்சியைத் துவங்குவதற்கு 5 நிமிடம்தான் இருக்கிறது என்றால், ஒரு துண்டு ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம். 201612100931149453 Foods to eat before

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button