ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பரிமாறும் அளவுகள் (Servings)

food_guide_pyramid_210914-300-seithy-healthyஒரு நபர் உண்ணும் உணவின் அளவினைக் குறிப்பிட பரிமாறும் அளவுகள் என்ற அளவு முறையைக் கடைபிடிக்கின்றோம். இது ஒரு வரையறுக்கப்பட்ட அளவு முறை கிடையாது. ஒரு உத்தேச அளவே. ஒரு பரிமாறும் அளவு என்பது நாம் உண்ணும் உணவைப் பொறுத்து எடையில், அளவில் மாறுபடும்.

ஒருவருக்கு எத்தனை பரிமாறும் அளவுகள்(servings) உணவுத் தேவை என்பது அவருக்கு எவ்வளவு சக்திகள்(calories) தேவை என்பதனைப் பொறுத்தது. ஒருவருக்கு எவ்வளவு சக்திகள் தேவை என்பது அவருடைய வயது, பால், உடல், எடை மற்றும் அவர் செய்யும் வேலைகள் போன்ற அம்சங்களைப் பொறுத்தது. தாங்களுக்கு தேவையான சக்திகளின் அளவினை அறிந்து அதற்கு ஏற்றார்போல் உணவு முறையையும் பரிமாறும் அளவுகளின் எண்ணிக்கையையும் அமைத்துக் கொள்ளவும்.

சில முக்கிய உணவுகளின் பரிமாறும் அளவுகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

தானிய உணவு வகைகள் (ஒரு பரிமாறும் அளவு)
Bread

ஒரு துண்டு ப்ரெட்
அரை கோப்பை சமைத்த அரிசி
இரண்டு ரொட்டிதுண்டுகள்
ஒரு அவுன்ஸ் கேக் வகை உணவுகள்
கால் கோப்பை சமைத்த தானியங்கள்

காய்கறி உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
Carrot

ஒரு கோப்பை கீரைகள்
அரை கோப்பை பச்சைக் காய்கறிகள்
முக்கால் கோப்பை காய்கறிச் சாறு

பழ உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
Orange

நடுத்தர அளவுள்ள ஒரு பழம் (ஆப்பிள், வாழை…)
அரை கோப்பை நறுக்கிய பழத்துண்டுகள்
முக்கால் கோப்பை பழச்சாறு

பால் உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
Milk

ஒரு கோப்பை பால்
ஒரு அவுன்ஸ் பாலாடைக்கட்டி
அரைக் கோப்பை தயிர்

இறைச்சி உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
Meat

90 கிராம் சமைத்த இறைச்சி
ஒரு முட்டை
100 கிராம் மீன் உணவு

இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
Fat

ஒரு தேக்கரண்டி வெண்ணெய், நெய் போன்றவை
ஒரு மேசைக்கரண்டி கிரீம்
ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஜாம்
ஒரு அவுன்ஸ் சாக்லேட்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button