30.5 C
Chennai
Friday, May 17, 2024
jajCNhP
சிற்றுண்டி வகைகள்

கைமா இட்லி

என்னென்ன தேவை?

இட்லி – 6,
தக்காளி சாஸ் – 3 டேபிள்ஸ்பூன்,
லெமன் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – தாளிக்க,
எண்ணெய் – சிறிதளவு,
வெங்காயம் – 1,
பூண்டு – 6 பல்,
கறிவேப்பிலை இலைகள்- 5,
பச்சைமிளகாய் – 1,
வெங்காயத்தாள் – 1,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய் போன்றவற்றை நறுக்கி தனியாக வைக்கவும். இட்லியினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டினை போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் தக்காளி சாஸ், தூள் வகைகள் சேர்த்து நன்றாக 5 முதல் 6 நிமிடங்கள் வதக்கவும்.

எல்லாம் நன்றாக வதங்கியவுடன், இட்லி துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியில் வெங்காயத்தாள், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி மேலும் 3 நிமிடங்கள் வேக விட்டுப் பரிமாறவும். இதனை தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.jajCNhP

Related posts

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan

ஜவ்வரிசி டிக்கியா

nathan

மெது போண்டா செய்வது எப்படி

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

உண்டி ஸ்டஃப்டு

nathan

பேப்பர் ரோஸ்ட் தோசை

nathan

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

nathan