சைவம்

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்

முள்ளங்கி, முள்ளங்கி கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கி கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்
தேவையான பொருட்கள் :

முள்ளங்கி கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – ஒன்று
சிகப்பு மிளகாய் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கீரையை சுத்தம் செய்து தண்டு பகுதியை தனியாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். கீரையையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* அதன் பிறகு வெட்டி வைத்துள்ள தண்டு பகுதியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

* பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து கீரை வேகும் வரை சிறிய தீயில் வைக்கவும். கீரை பச்சை நிறம் மாறாமல் வேக வைக்கவும்.

* வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்.

* சத்தான முள்ளங்கி கீரை பொரியல் ரெடி.

* ரசம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற பொரியல் இது.201612131400223499 Mullangi Keerai poriyal radish greens poriyal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button