சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

குழந்தைகளுக்கு மாலையில் மிகவும் பிடித்தமான கச்சோரி செய்து கொடுக்கலாம். இந்த கச்சேரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – அரை கப்
மைதா மாவு – அரை கப்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
ஆப்பசோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

பூரணம் செய்ய :

பச்சைப்பட்டாணி – ஒரு கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மாங்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கடலைமாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* பச்சைப்பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, ஆப்பசோடா, சிறிது எண்ணெய் சேர்த்து பிசறி தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசைந்து மாவை ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வேகவைத்து மசித்த பச்சைப்பட்டாணியைச் சேர்க்கவும்.

* இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், சோம்புத்தூள், சாட் மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கலக்கவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் கடலைமாவை கலவையில் தூவி கிளறி இறக்கினால், உதிரியான பூரணம் தயார்.

* கச்சோரிக்கு பிசைந்த மாவை திரட்டி, வட்டமாகத் தேய்க்கவும். இதன் உள்ளே பூரணம் வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் கச்சோரி தயார்.

குறிப்பு : கச்சோரியின் உள்ளே வைக்கப்படும் பூரணம் உங்கள் விருப்பப்படி காய்கறிகளாகவோ அல்லது முளைவிட்ட பயறு, கறுப்பு உளுந்து என வித்தியாசமாக வைத்தோ பொரித்தெடுத்துப் பரிமாறலாம்.201612101522223280 evening snacks kachori SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button