அசைவ வகைகள்

அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ்

மட்டன் புலாவ் பிரியாணியில் இருந்து மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்கள். மட்டன் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ்
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – அரைக் கிலோ
ஆட்டுக்கறி – அரைக் கிலோ
பெரிய வெங்காயம் – இரண்டு
பச்சைமிளகாய் – நான்கு
இஞ்சி, பூண்டு விழுது – 4 டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
தனியாத்தூள் – இரண்டு டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
மஞ்சத்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன் முந்திரி,
கிஸ்மிஸ்பழம் : கால் கப்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
புதினா- ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு – ஒரு பழம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா நான்கு
மராட்டி மொக்கு – இரண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* பாஸ்மதி அரிசியை கழுவி ஊறவைக்கவும்.

* ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* குக்கரில் மட்டனை போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுதில் பாதியளவு மற்றும் மிளகு, சிறிது உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து 5 வில் விட்டு வேகவைக்கவும். விசில் இறங்கிய உடன் மட்டன் துண்டுகளை தனியே எடுத்துவைக்கவும்.

* குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு உள்ளிட்ட வாசனைப் பொருட்களைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மீதமுள்ள இஞ்சி – பூண்டு விழுது பச்சைமிளகாய் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

* இஞ்சி – பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா உள்ளிட்ட மசாலா பொடிகளை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேகவைத்த மட்டன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறவும்.

* பின்பு அதில் மட்டன் வேகவைத்த தண்ணீர் உடன் ஒரு கப் அரிசிக்கு ஒன்றே கால் கப் வீதம் தண்ணீரை அளந்து ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* மசாலா நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை கொட்டி குக்கரை மூடவும். விசில் போடவேண்டாம். ஆவி வரும் போது விசில் போட்டு அடுப்பை மிதமாக எரிய விடவும். சரியாக 10 நிமிடத்தில் அடுப்பை நிறுத்தி விடலாம். நன்றாக புலாவ் பொல பொலவென சூப்பராக வெந்திருக்கும்.

* குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாற்றை மேலாக தெளிக்கவும்.

* கடைசியில் முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் பொரித்து அலங்கரித்து பரிமாறவும்.

* சூப்பரான மட்டன் புலாவ் ரெடி.201612141518384595 how to make mutton pulao SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button