சரும பராமரிப்பு

தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வேப்ப எண்ணெய்

தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வேப்ப எண்ணெய்
தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினி தான் வேப்ப எண்ணெய். வேப்ப மரத்தின் இலை, காய், பழம் என அனைத்து உறுப்புகளுமே மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சிறந்த கிருமிநாசினியாகும்.

வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.

கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி, பழங்களாக பழுக்கும். உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர்.

அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும். ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது.

* இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.

* வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

* வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* வேப்ப எண்ணெயை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணெய்யை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.201612160925439475 Neem oil will provide the solution to the problems of the SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button