பழரச வகைகள்

சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்

விருந்தினர் திடீரென வீட்டிற்கு வந்தால் விரைவில் செய்யக்கூடிய தேங்காய் பால் ஸ்வீட் கீர் செய்து கொடுத்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்
தேவையான பொருட்கள் :

தேங்காய் பால் – 1 கப் முதல் 2 கப்
சர்க்கரை – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு – 2 டீஸ்பூன்
திராட்சை பழம் – 1/2 கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
சோள மாவு – 2 ஸ்பூன்

செய்முறை :

* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* தேங்காய் பாலின் முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.

* அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இரண்டாவது பாலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அதில் சோளமாவை போட்டு கரைத்து விட்டு சர்க்கரை போடவும்.

* ஒரு கொதி வந்து சற்று திக்கான பதம் வந்ததும் இறக்கி தேங்காய் துருவல், பாதாம், முந்திரி, திராட்சை பழங்களை போட்டு கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.

* இப்போது தேங்காய் பால் ஸ்வீட் கீர் ரெடி.

* தேவையான போது, எடுத்து ஜில்லென்று பரிமாறவும். 201612191522155912 coconut milk sweet kheer SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button