ஆரோக்கிய உணவு

புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகள்!!!

புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் பெரும்பாலும் நுரையீரல் தான் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மற்றும் நிகோடின் எனும் மூலப்பொருள் தான் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் முதல் கருவியாக இருக்கிறது.

நீங்கள் மனம் திருந்தி புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் கூட, அதன் பிறகு நுரையீரலில் புகையின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

எனவே, நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகளை, நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய உடனே தினந்தோறும் உட்கொள்ள பழக்கிக் கொள்வது உங்கள் உடல் நலம் மேலோங்க வெகுவாக உதவும்….

வைட்டமின் சி உணவுகள் வைட்டமின் சி சத்துள்ள உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க நல்ல முறையில் உதவும். இது, உங்கள் உடலில் கலந்திருக்கும் நிகோடின் போன்ற நச்சுகளை வேகமாக அகற்ற உதவும். ஆரஞ்சு, தக்காளி போன்ற காய்கறி, பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

காரட் ஜூஸ் உங்கள் உடல் பாகங்கள் மற்றும் இரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகளை விரைவாக அகற்ற காரட் ஜூஸ் உதவும். இதில் இருக்கும் உயர்ரக வைட்டமின் ஏ, சி, கே, மற்றும் பி உங்கள் உடல்நலனை மேலோங்க செய்ய வெகுவாக உதவும்.

ப்ராக்கோலி புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நீங்கள் உட்கொள்ள வேண்டிய காய்கறியில் ப்ராக்கோலி மிகவும் முக்கியமான உணவாகும். நுரையீரலில் தேங்கியிருக்கும் நிகோடின் நச்சுகளை அகற்றி, சுத்தம் செய்ய ப்ராக்கோலி உதவும். ப்ரோக்கோலியில் சல்ஃபரோபேன் எனும் மூலப்பொருள் இருக்கிறது, இது நுரையீரலின் காயங்களை விரைவில் ஆற்ற உதவும்.

பசலைக்கீரை பசலைக்கீரை நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும். இதனால் உங்கள் இரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுப் பொருள்களை எளிதாக அகற்றிட உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலத்தின் சத்து நிறைய இருக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை இந்த பழங்கள், உங்கள் உடலில் மீண்டும் வைட்டமின் சத்துகள் அதிகரிக்க உதவும். இதனால், உங்கள் உடல் பாகங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.

பைன் நீடில் டீ இந்த தேநீர், புகைப்பிடித்தால் உங்கள் வாயில் மற்றும் பற்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய உதவும். மற்றும் உங்கள் நுரையீரலின் ஆரோக்கியம் மேன்மையடையவும் இந்த தேநீர் உதவும். மேலும் இது, உங்கள் இதயம் மற்றும் தொண்டையின் நலனிற்கும் நன்மை விளைவிக்கும்

பீன்ஸ், வெள்ளரி இந்த காய்கறிகள் உங்கள் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க உதவுகிறது.

தண்ணீர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திய பிறகு, நீங்கள் தினமும் கட்டாயம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் உடலில் இருக்கும் நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரகங்களுக்கு நல்லது.

06 1438859154 3ninehealingfoodsafterquittingsmoking

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button