மருத்துவ குறிப்பு

இளம் வயதில் தந்தையாகும் ஆண்களுக்கு நடுவயதில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்!!!

சமீபத்தில் பின்லாந்தில் இருக்கும் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் (University of Helsinki) நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்களுக்கு, அவர்களது நடுவயதில் உடல்நல அபாயங்கள் அதிகம் ஏற்படுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, 20 முதல் 25 வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்களின் உடல்நலன், 25 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்களோடு ஒப்பிடுகையில், 25 வயதிற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்களின் உடல்நலத்தில் தான், நடுவயதை எட்டும் போது உடல்நல குறைபாடுகள் அதிகம் ஏற்படுகிறது என இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்…

மருத்துவர் எலினா எய்னோ இந்த ஆய்வை நடத்திய ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தை (University of Helsinki) சேர்ந்த எலினா எனும் மருத்துவர் இது குறித்து, "22 வயதிற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் (தந்தையாகும் ஆண்கள்) அவர்களது நடுவயதில் உடல்நலம் குன்றி காணப்படுகின்றனர்." என கூறியுள்ளார்.

அதிகளவில் இறப்பு 22வயதில் தந்தை நிலையடையும் ஆண்களில் நிறைய பேர் அவர்களது நடுவயதிலேயே (35 – 50) இறக்கும் தருணத்தை சந்திக்கின்றனர் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மன அழுத்தம் மற்றும் பொருளாதாரம் நடுவயதில் இவர்கள் இறப்பதற்கு முக்கிய காரணாமாக இருப்பது, இவர்களது மன அழுத்தமும், பொருளாதார நிலையம் தான் எனவும், இளம் வயதிலேயே குடும்ப பொருளாதாரத்தை சுமக்க முடியாமல் இவர்கள் தடுமாறுது, இவர்களது உடல் நலனை வலுவாக பாதிக்கிறது எனவும் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

உடல்நல அக்கறை அவசியம் பெரும்பாலும் உலகம் முழுவதும் உள்ள ஆண்கள், தங்களது குடும்பத்தின் நலன் கருதி, தங்கள் நலனை மறந்துவிடுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த ஆய்வின் முடிவில், " குடும்பத்தின் தேவைகள் மற்றும் நிறைகளுக்கு இணையாக ஆண்கள் அவர்களது ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்" என கூறியுள்ளனர்

பத்துவருட ஆய்வில் மருத்துவர் எலினா எய்னோவின் குழுவினர் கடந்த பத்து வருடமாக சேகரித்த தகவல்களின் மூலம், இளம் வயதில் தந்தையாகும் ஆண்களில் 20-தில் ஓர் ஆண் அவனது நடுவயதில் இறப்பை சந்திக்கிறார் என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் இவர்களது இறப்பிற்கு இதய நோய்கள் / பிரச்சனைகள் மற்றும் குடிப்பழக்கமும் தான் காரணமாக இருக்கிறது எனவும் அவர்கள் இந்த ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

சகோதரர்களுக்கு முன்னரே இறந்துவிடுகின்றனர் உடன் பிறந்தோர் இருப்பவர்களை வைத்து நடத்திய ஓர் சிறிய ஆய்வில், 22 வயதில் தந்தை ஆகும் 73% ஆண்கள், அவர்களது சகோதரருக்கு (25வயதிற்கு மேல் தந்தையான) முன்னரே இறந்துவிடுகின்றனர் எனவும் கண்டறிந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி குடும்ப பாரத்தை சுமந்து வழிநடத்த தகுதியை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துக்கொள்பவர்கள், அவர்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாய் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் இது தான் அவர்களை கொல்லும் முதல் கருவியாக உருவெடுக்கிறது.

முதிர்ச்சி முக்கியம்
இளம் வயதில் (22) திருமணம் செய்துக்கொள்வது கூட தவறல்ல, ஆனால், முழுமையான முதிர்ச்சியின்றி குடும்ப தலைவன் எனும் பொறுப்பை ஏற்று நடக்க தொடங்குவது தான் தவறு. வயதைவிட, இங்கு ஆண்களுக்கான மனதளவிலான அந்த முதிர்ச்சி மிகவும் அவசியம்.

05 1438755508 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button