சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான மேத்தி தெப்லா

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சுவையான சத்தான மேத்தி தெப்லா செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

சுவையான சத்தான மேத்தி தெப்லா
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்,
வெந்தயக்கீரை (மேத்தி) – 1 கப்,
புதினா – 1/4 கப்,
மிளகாய் தூள் – 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை :

* புதினா, வெந்தயக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை (மேத்தி), புதினா இலைகளைப் போட்டு, தயிர், மிளகாய் தூள், உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும்.

* 10 நிமிடங்கள் கழித்து அதில் கோதுமை மாவைச் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

* இந்த மாவை சம அளவு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு இரு பக்கமும் சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான மேத்தி தெப்லா ரெடி.201612200857167066 delicious nutritious methi Thepla SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button