சைவம்

சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணி

அசைவம் பிடிக்காதவர்களுக்கு சிறந்த மாற்று மஷ்ரூம். இப்போது மஷ்ரூம் வைத்து எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.

சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணி
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – ஒரு கிலோ,
பட்டன் மஷ்ரூம் – 400 கிராம்,
வெங்காயம் – 250 கிராம்,
தக்காளி – 200 கிராம்,
இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
புதினா – 50 கிராம்,
கொத்தமல்லித் தழை – 100 கிராம்,
மிளகாய்த்தூள் – 20 கிராம்,
எலுமிச்சைப் பழம் – ஒன்று,
பூண்டு – 100 கிராம்,
நெய் – 100 மில்லி,
எண்ணெய் – 100 மில்லி,
கிராம்பு, பட்டை – தலா 10 கிராம்,
ஏலக்காய் – 5 கிராம்,
பிரியாணி இலை – 5 கிராம்,
தயிர் – 100 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, ப,.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மஷ்ரூமை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

* பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து. புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கி கிரேவி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் சேர்த்துக் கிளறவும்.

* பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.

* சூப்பரான மஷ்ரூம் பிரியாணி ரெடி.201612211526505965 mushroom biryani SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button