சிற்றுண்டி வகைகள்

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து சத்தான சுவையான சுண்டல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள் :

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 3,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும்.

* இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்.

* சத்தான முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

குறிப்பு: வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டாமல், புளி ஊற வைக்க, குழம்பில் ஊற்ற, சப்பாத்தி மாவு பிசைய பயன்படுத்தலாம்.201612211310166022 Sprouts White Chickpea sundal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button