32.1 C
Chennai
Sunday, May 11, 2025
சூப் வகைகள்

வெள்ளரி சூப்

என்னென்ன தேவை?

வெள்ளரிக்காய் – 1
வெண்ணெய் – 20 கிராம்
பால் – 100 மி.லி
சோளமாவு – 2 தேக்கரண்டி
பாலாடைக்கட்டி – 25 கிராம்
சர்க்கரை – கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி
பாலாக்கு இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதலில் வெள்ளரிக்காய்யை நன்கு கழுவி, தோலுரித்து துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு, அதனுடன் துருவிய வெள்ளரி மற்றும் பாலாக்கு இலைகளைச் சேர்க்கவும். 4 நிமிடங்கள் அவற்றை வதக்கி அதில் சோளமாவு சேர்த்து மீண்டும் 1 நிமிடம் வதக்கவும். தீயைச் சற்று குறைத்து, இரண்டு கப் தண்ணீர் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கிக் கொண்டே இருக்கவும். வெள்ளரி நன்கு வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு அதனை நன்கு கலக்கி அதனுடன் பால், மிளகுத்தூள், உப்பு மற்றும் துருவிய பாலாடைக்கட்டியைச் சேர்த்து கொதிக்கவிடவும். பாலாடைக்கட்டி உருகியவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

Related posts

வெங்காய சூப்-உணவு நல்லது வேண்டும்!

nathan

தாய்லாந்து மஷ்ரூம் சூப்

nathan

உங்கள் அன்றாட உணவில் ரசம் சேர்ப்பதன் அற்புதமான விளைவு! பல நோய்களைத் தடுக்க முடியுமா?

nathan

மழைக்காலத்துக்கு உகந்த தூதுவளை சூப்

nathan

வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மணத்தக்காளி சூப்…

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

கீரிம் காளான் சூப்

nathan

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான ப்ராக்கோலி சூப்

nathan