சாலட் வகைகள்

முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட்

தினமும் காலையில் ஒரு கப் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். இப்போது சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட்
தேவையான பொருட்கள் :

பப்பாளி – ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்),
முளைகட்டிய பச்சைப் பயறு – 50 கிராம்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறிய துண்டு,
கொத்தமல்லி – சிறிதளவு,
தேன் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்கி ‘கட்’ செய்து இட்லி குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

* முளைகட்டிய பச்சைப் பயறையும் தனியாக வேக வைத்து கொள்ளவும்.

* இஞ்சி, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்,

* ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* இதனுடன் கடைசியாக வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.

* சுவையான சத்தான முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட் ரெடி.201612221307378048 Sprouted Green Lentil Papaya Salad SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button