எடை குறைய

இயற்கை முறையில் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

உடல் ஆரோக்கியம், உடல் எடை குறைய விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.

இயற்கை முறையில் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்
இயற்கை மருத்துவர் எஸ்ரா வின்சென்ட் தரும் டிப்ஸ்:

சாப்பாடு சாப்பிடும்போது, நன்றாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும்.

கோபம், கவலை இருக்கும் சமயங்களில் மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும். அல்லது கோபம் தணிந்த பிறகு சாப்பிடவும்.

கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம்.. கைக்குத்தல் அரிசியில் உடலை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கின்றன. வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை உண்பது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது.

நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி,வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

மைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

காலை வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டுவர, உடல் எடை குறையும்.

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.

அதிகமாக மோர் குடிக்கவும். தயிர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. பால் அளவாக அருந்த வேண்டும். சீஸ் தவிர்க்க வேண்டும்.

பழச்சாறு, காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொள்ளு சூப், கொள்ளு துவையல், வறுத்த கொள்ளு, வேகைவைத்த கொள்ளு போன்றவற்றை வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்ளவும். கொள்ளு சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு சீக்கிரம் கரைந்துவிடும். கொள்ளு ரசத்தைக் குளிர்காலங்களில் பயன்படுத்தவும். சூடான உடல்வாகு கொண்டவர்கள் கொள்ளைத் தவிர்ப்பது நல்லது.

உணவுக்கட்டுப்பாடுடன் யோகா, நீராவிக் குளியல் ஆகியவை செய்வது உடல் எடை குறைய வழி வகுக்கும்.

நோன்பு தெரப்பி

உடல் எடை சீக்கிரம் குறைய நோன்பு தெரப்பி (Fasting therapy) எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தொடர்ந்து கடைப்பிடிக்காவிட்டால், உடல் எடை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. எனவே, திருமணம் முதலான சில காரணங்களுக்காக சீக்கிரம் எடை குறைக்க விரும்புபவர்கள் மட்டும் இந்த தெரப்பியை எடுத்துக்கொள்ளலாம்.

நோன்பு தெரப்பி எடுப்பது எப்படி?

மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் என இந்த தெரப்பி எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த நாட்களில் அரிசி, எண்ணெய், கொழுப்பு உணவுகளை அறவே தவிர்த்து, தண்ணீர், பச்சைக்காய்கறிகள், பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும். மருத்துவர் பரிந்துரையின் பேரில் இந்த தெரப்பியை எடுத்துகொள்ளலாம். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை, காலை முதல் இரவு வரை, ஒரு நாள் நோன்பு தெரப்பி எடுப்பது நல்லது.201612221024303516 Simple Steps to reduce weight in a natural way SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button