மருத்துவ குறிப்பு

தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்

அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது.

தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்
முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள்.

அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். முத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை பார்க்கலாம்.

அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாயனங்கள் சுரக்கிறதாம். இதனால் முத்தம் கொடுப்பவர் மீது காதலும் அன்பும் அதிகரிக்குமாம்.

வீட்டில் சின்னதாய் சண்டை என்றால் முகத்தை திருப்பிக் கொண்டு போவது சண்டையை அதிகமாக்கும். அதேசமயம் எதிர்பாரத நேரத்தில் நச் என்று ஒரு முத்தம் கொடுங்களேன். சண்டை போட்டவர் கூட சமாதானமாகப் போய்விடுவார்.

முன் விளையாட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது முத்தம். ஆண்கள் உறவுக்கு முன்பாக அதிகமாய் முத்தமிடுகின்றனர். அதேசமயம் உறவு முடிந்து நன்றி கூறும் விதமாக ஆண்களை முத்தமழையால் நனைக்கின்றனர் பெண்கள்.

முத்தம் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம். ஆழமாய் அழுத்தமாய் கொடுக்கும் முத்தம் மூலம் 23 கலோரிகள் காணாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வருவானா? இல்லையா? என்பதை ஆண்கள் கொடுக்கும் முத்தம் மூலம் உணர்ந்து கொள்வார்களாம் பெண்கள். அதேபோல முதல் முதலாக கொடுத்த அல்லது பெற்றுக் கொண்ட முத்தத்தை அதிகமாய் நினைவில் வைத்திருப்பதும் பெண்கள்தானாம்.201612231449046334 couple conflict over kiss SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button