கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

பொடுகை நீக்க சில டிப்ஸ்…

Description:

podugu

1. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், உடல் உஷ்ணம் குறைவதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும்.

2. வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால், பொடுகு வராமல் தடுக்கலாம்.

3. வெந்தயத்தை தேங்காய் எண்ணெயோடு சிறிது சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனையை நீக்கலாம்.

4. தலைக்கு குளிக்கும் போது, சிறிது தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்த்து வாரம் ஒரு முறை குளித்தால், பொடுகு மறையும்.

5. துளசி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து, சிறிது எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

6. நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகு நீங்கும்.

7. தலைக்கு குளிக்கும் போது, இறுதியாக குளிக்கும் தண்ணீரில், சிறிது வினிகர் கலந்து தலைக்கு ஊற்றி குளித்தால், பொடுகு வராமல் இருக்கும்.

8. தேங்காய் எண்ணெயில் வசம்பை நன்கு பவுடராக்கி, அதில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

 

Related posts

ஒல்லியான முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

உங்க முடி வேரோட கொட்டுதா? இதோ அற்புதமான சில டிப்ஸ்

nathan

பொடுகு காரணமாக முடி விழுவதை நிறுத்த இந்த ஓட்ஸ் முடி பேக்கை முயலவும்.

nathan

உங்களுக்கு தலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முடி அதிகம் கொட்டுதா? கிடுகிடுன்னு முடி வளருமாம்!

nathan

பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… அப்ப இத படிங்க!

nathan

இயற்கை சாயம் செய்ய உதவும் சில செய்முறைகள்…

sangika

முடி வளர…. பாட்டி மருத்துவம்

nathan

தலைமுடி அதிகம் உதிர்வது ஏன் தெரியுமா?

nathan