முகப் பராமரிப்பு

இளமையான சருமத்தை தரும் சிவப்பு திராட்சை ஃபேஸியல் மாஸ்க் !!

30 வயதை கடந்ததுமே கொலாஜன் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். அதன் அறிகுறிகள் நம் முகத்திலுள்ள கன்னப்பகுதிகளில் உள்ள கொழுப்புகள் கரைந்து தசைகள் தளர ஆரம்பிக்கும்.

இதனால் முகச் சதைகளுக்கு பிடிமானமில்லாமல் தொங்கி போய் வயதான தோற்றத்தை தரும். கவலைப் ப்டாதீர்கள். இது உடனே நடக்கக் கூடிய நிகழ்வல்ல. ஆனால் படிப்படியாக ஆரம்பிப்பது கண்கூடாக தெரியும். இதனை தவிர்க்க முடியாவிட்டாலும் தள்ளிப் போடலாம் அல்லவா.

அதிக புரோட்டின் நிறைந்த சோயா, ஓட்ஸ் ஆகியவை கொலாஜனை தூண்டும். ஆகவே அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்சத்து நிறைந்த காய்கள் பழங்கள் கட்டாயம் உங்கள் டயட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது தவிர்த்து நிறைய நீர் குடிப்பது மிக மிக அவசியம்.

அதோடு, சருமத்திற்கு ஊட்டம் தரும் அழகுகுறிப்புகளை அவ்வப்போது பயன்படுத்தினால் உங்கல் சருமம் இறுகி, 20 வயது போலவே காட்சியளிக்கும். அப்படி ஒரு வகையான குறிப்புதான் நீங்கள் பார்க்கப்போவது.

தேவையானவை : சிவப்பு திராட்சை – சில ஸ்ட்ரா பெர்ரி – சில யோகார்ட் – 2 டீ ஸ்பூன் தேன் – 1 ஸ்பூன்

சிவப்பு திராட்சையிலும், ஸ்ட்ரா பெர்ரியிலும் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அதிலும் ஸ்ட்ரா பெர்ரியில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இவை சுருக்களை நீக்குகிறது. சரும செல்களை உயிர்ப்பிக்கிறது.

செல் வளர்ச்சி முகத்தில் அதிகரிக்கும். இதனால் மீண்டும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இப்படி இளமையை நீட்டிக்கச் செய்யலாம். அது தவிர நாம் சேர்க்கும் யோகார்டில் உள்ள கிருமி எதிர்ப்பு திறன் சருமத்தை பாதிப்புகளிலிருந்து காக்கிறது

ஈரப்பதத்தை முகத்திற்கு அளிக்கிறது. தேன் சருமத்திற்கான அருமையான குணம் பெற்ற பொருளாகும். இவை சருமத்தை மென்மையாக்கும். மிளிரச் செய்யும். சுருக்களை போக்கும்.

சிவப்பு திராட்சை மற்றும் ஸ்ட்ரா பெர்ரியை நன்றாக மசித்துக் கொண்டு அதில் யோகார்ட் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். சிலனிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 3 நாட்கள் செய்து பாருங்கள். முகம் புதிதாய் தெரியும்.

skin3 17 1471431378

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button