சிற்றுண்டி வகைகள்

சத்தான அத்திப்பழம் நட்ஸ் உருண்டை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சத்தான அத்திப்பழம் நட்ஸ் உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான அத்திப்பழம் நட்ஸ் உருண்டை
தேவையான பொருட்கள் :

உலர்ந்த அத்திப்பழம் – 20
உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை – தலா கால் கப்
ரூட்டி ஃப்ரூட்டி – 50 கிராம்,
பேரீச்சம்பழம் – 15
தேன் – சிறிதளவு.

செய்முறை :

* உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் உலர்ந்த அத்திப்பழம், உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை, ரூட்டி ஃப்ரூட்டி, பேரீச்சம்பழத்தை போட்டு நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகளாக வேண்டிய வடிவில் பிடிக்கவும்.

* அத்திப்பழம் நட்ஸ் உருண்டை ரெடி.

* மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.201612241251151659 how to make fig nuts ball SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button