baby eating
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்

இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல் இருக்க, தேவையில்லாத கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். ஆனால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது என்பது சற்று கடினமானது. ஏனெனில் அவர்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடாமல் வைப்பது என்பது மிகவும் கடினம். மேலும் அவர்களது டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிகமான அளவில் உண்ணுதல் போன்றவைகளும் குழந்தைகளை குண்டாக்குகின்றன. ஆகவே அவர்களை சரியாக பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்களை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

* குழந்தைகள் குண்டாவதற்கு அவர்களின் உடலில் இருக்கும் மரபணுக்கள் பெரும்பாலும் காரணமாகின்றன. ஆகவே மறக்காமல் மருத்துவரை உடனே அணுக வேண்டும். ஏனெனில் மரபணுவில் ஏதாவது திடீரென மாற்றங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகள் குண்டாவார்கள்.

* குழந்தைகளின் உடல் எடை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டே வர வேண்டும். மேலும் அதற்கேற்றவாறு உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் அதிகமான உணவுப் பொருட்களை கொடுத்தால், அதில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குழந்தைகளின் உடலில் சென்று உடல் பருமனை ஏற்படுத்திவிடும். ஆகவே அவர்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்குமாறு பார்த்து வரவும்.

* குழந்தைகளை எப்போதும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது, குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்து டி.வியை பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களை விளையாட சொல்ல வேண்டும். ஏனெனில் இதனால் குழந்தைகளின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஓடுதல், நடத்தல், குதித்தல், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாட வைக்கலாம்.

* குழந்தைகளுக்கு அதிகமான அளவில் பாஸ்ட் ஃபுட் உணவுகளான பிரன்ச் ப்ரைஸ், சிப்ஸ், ப்ரைடு சிக்கன், மில்க் ஷேக் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். ஏனெனில் இவற்றில் அதிக அளவு கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இதனை அதிகம் சாப்பிட்டால், பிற்காலத்தில் இதய நோய் விரைவில் வந்துவிடும்.

* அதிக அளவில் கொழுப்புக்கள் உள்ள பாலைக் கொடுப்பதை விட, குறைந்த அளவில் கொழுப்புக்கள் இருக்கும் பாலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பிற்காலத்தில் குண்டு தான் ஆவார்கள்.

* பால் பொருட்களை கொடுக்கும்போது கூட, கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

* குண்டாகும் குழந்தைகள் விரைவில் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஏனெனில் குண்டாக இருப்பதால், நிறைய பேர் கிண்டல் செய்வார்கள். ஆகவே அவர்கள் எடையை குறைக்க ஊக்குவிப்பதோடு, அவர்களுடன் அன்பாக, பாசத்துடன் நடக்க வேண்டும்.

* மாலை வேளையிலோ அல்லது மற்ற வேளைகளிலோ, அவர்களுக்கு உண்ண உணவுகளை கொடுக்கும் போது, ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்காமல், அவர்களுக்கு ஏதேனும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

ஆகவே, மேற்கூறிய வழிகளைப் பின்பற்றினால், குழந்தைகள் எடை கூடாமல், அழகாக பிட்டோடு இருப்பார்கள்.

Related posts

இத்தனை நன்மைகளா…!! முளைகட்டி சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள்

nathan

பருக்கள் உங்க முகத்தையே கெடுக்குதா..? இனி அந்த கவலையை ஒட்டு மொத்தமா ஒழித்து கட்ட ஒரு எளிய வழி!…

sangika

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக கற்களை தடுக்கும் வாழைத்தண்டு துவையல்

nathan

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் எண்ணிலடங்காத நன்மைகள்

nathan

பிறந்தநாளில் கமல்ஹாசனுக்கு தாயாக மாறிய அண்ணி!

nathan

கவலையே படாதீங்க… வீட்ல நெய் இல்லயா?அதே டேஸ்ட் தரும் 8 பொருள்கள்

nathan

கால்களை அழகாக்க இத செய்யுங்கள்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இயற்கையான முறையிலேயே தயாரிக்கலாம் ‘முடி சாயம்’

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குட்டை தலை முடியின் அழகு ரகசியம்

nathan