சட்னி வகைகள்

பீட்ரூட் சட்னி

எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னி வகைகளை செய்து சாப்பிட்டால் எப்படி? விதவிதமான சட்னி வகைகளையும், அதாவது உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி போன்றவற்றை சமைத்து ருசித்து சாப்பிட்டு பாருங்க…

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 2
வரமிளகாய் – 4
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கீற்று
தேங்காய் – ஒரு துண்டு
சின்ன வெங்காயம் – 4
புளி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும், தேங்காயை சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய் முதல் சின்ன வெங்காயம் வரை உள்ள‌ பொருட்களை வதக்கி ஆற‌வைக்கவும்.

* பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை வதக்கி நீர் தெளித்து வேகவைக்கவும்.

* வதக்கி ஆறவைத்த பொருட்களுடன் புளி மற்றும் உப்புச் சேர்த்து அரைத்து, பிறகு பீட்ரூட்டையும் அதனுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும். சுவையான‌ பீட்ரூட் சட்னி தயார்.1467199770 811

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button