மருத்துவ குறிப்பு

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்..

மாடிப் படிகளில் ஏறலாமா?

அறுவைச் சிகிச்சைக்குப் பின் முதல் சில வாரங்களில் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக லிஃப்ட்டைப் பயன்படுத்தலாம். படி ஏற வேண்டிய கட்டாயம் இருந்தால் மெதுவாக ஏறிச் செல்லலாம்.

ஒரு சில படிகளைக் கடந்த பிறகு சிறிது ஓய்வு எடுக்க வேண்டும். மூச்சு அடைப்பது போன்று இருந்தால் ஓய்வு எடுப்பது அவசியம். முற்றிலும் குணமான பின்பு படிகளில் ஏறுவதை உங்களது அன்றாடச் செயல்களில் ஒன்றாகக் கருதிக் கொள்ளலாம். இந்த நிகழ்வுகள் சாதாரணமானவைதான்.

அதிக பசியின்மை, உணவை ருசிக்கும் உணர்ச்சி குறைந்துவிட்டதைப் போன்றோ அல்லது ருசி உணர்ச்சியே இல்லாதது போலவோ உணரலாம். மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகலாம். இரவில் தூங்க முடியாதவர்கள் பகலில் தூங்குவதைத் தவிர்க்கவும். பகல் தூக்கம் உங்களின் தூங்கும் பழக்கத்தையே மாற்றி விடும்.

பல வகையான குழப்பமான உணர்ச்சிகளை அனுபவிக்க நேரிடும். கவலை, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவது சகஜம். இந்த உணர்ச்சிகள் உங்களைத் தொடர்ந்து பாதித்து தூக்கத்தைக் கெடுக்கும் நிலையில், மருத்துவரின் உதவியை நாடலாம். அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் ஒரு சிறு வீக்கம் இருக்கும். ஆனால் நாளடைவில் மறைந்துவிடும். முன் கையில் அறுவை செய்திருந்தால் விரல்கள் மரத்துப்போய்விடும்.

தோள்களிலோ, முதுகின் மேற்புறத்திலோ (இரு தோள்பட்டைகளுக்கு இடையில்) தசையில் வலி அல்லது இறுக்கம் இருப்பதாக

உணரலாம். இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் மாத்திரையைச் சாப்பிட்டு வந்தால் குணமாகிவிடும்.

பாதங்களில் வீக்கம் உண்டாகும். குறிப்பாக கால்களில் துளையிடப்பட்டிருந்தாலும் வீக்கம் உண்டாகும். காலைத் தூக்கும்போது வீக்கம் குறையலாம். நிற்கும்போது வீக்கம் தோன்றலாம். வீக்கம் தொடர்ந்து இருந்து வந்தாலோ, நிலைமை மோசமாகத் தோன்றினாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.h9991261 007

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button