மருத்துவ குறிப்பு

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள்

சோம்பு நீரை குடித்து வந்தால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள்
வாசனைப் பொருளாக சமையலில் பயன்படுத்தப்படும் சோம்பு, மருத்துவ குணங்களும் நிறைந்தது.

தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக, சுடுதண்ணீரில் சோம்பு சேர்த்து கலந்து குடித்து வருவது நலம் பயக்கும்.

ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி சோம்பு பொடியைப் போட்டு 15 நிமிடம் மூடிய நிலையில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதை வடிகட்டி, உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு அல்லது பின்பு குடிக்க வேண்டும்.

இந்த சோம்பு நீர், தூக்கமின்மை பிரச்சினையைப் போக்கும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், செரிமான தன்மையை ஊக்குவிக்கும், கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 201701010916371642 medicinal properties of anise water SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button