ஆரோக்கிய உணவு

சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதால், இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
அசைவ ஹோட்டல்களுக்கு சென்றால், அங்கு முதலில் நாம் சாப்பிடுவது பிரியாணியாகத் தான் இருக்கும். ஆனால் அந்த பிரியாணி அரிசியால் செய்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். பொதுவாக எடையை குறைக்க டயட் மேற்கொள்வோர் சாதம் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. என்ன தான் சாதமானது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவிப் புரிந்தாலும், இதில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதால், இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் பல பேருக்கு சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிகிறதோ இல்லையோ, நிச்சயம் அதை சாப்பிடாமல் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நன்கு தெரிய வாய்ப்புள்ளது. சாதம் சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகளும் சரிசமமாக உள்ளது.

சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். மேலும் அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தி விடும்.

வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிட்டு வந்தால் 2 வகையான நீரிழிவு வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே சாதம் சாப்பிட ஆசை வந்தால் கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள்.

கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடுகையில் வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் எவ்வித சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் போவதில்லை.

உடல் எடை குறைக்க வேண்டுமானால், சுமார் ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருங்கள். ஏனெனில் வெள்ளை சாதத்தில் அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளதால், உடலின் எடையானது அதிகரிக்கும்.

நிபுணர்களின் கருத்துப்படி, மனிதனின் உடலில் அதிகப்படியான ஸ்டார்ச் இருப்பது நல்லது. ஏனெனில் இவை இரத்த சர்க்கரையின் அளவை அதிகமாக்கிவிடும்.

வெள்ளை சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், தொப்பை வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், பசி உணர்வை அடிக்கடி ஏற்படுத்தி விடும்.201612311352221874 Rice is health fair SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button