கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் முதுகுவலி

கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் முதுகுவலி
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் இவர்கள் மருத்துவரைக் கேட்காமல், தாமாகவே வலி நிவாரணிகளை விழுங்கிவிட்டு வலியில் இருந்து விடுபடுகிற பெண்கள் எக்கச்சக்கம்.

“கர்ப்பம் தரித்த 5-வது மாதத்திலிருந்து முதுகுவலியானது ஆரம்பமாக வாய்ப்பு அதிகம். வெகு சிலருக்கு கர்ப்பமான 8-வது வாரத்திலிருந்து முதுகுவலி ஆரம்பிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீத கர்ப்பிணிகள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் இருக்கிறது.

கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது.

இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது”. “மருத்துவ அறிவுரைப்படி, நடத்தல், சைக்ளிங், நீச்சல் போன்றவை செய்வதால் முதுகு, வயிறு தசைகள் பலவீனமடையாமல் பாதுகாக்கப்படும். இதனால் வலியை குறைக்கலாம். பனிக்கட்டியால் முதுகுப்பகுதியில் தினமும் 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்கலாம்.

இரண்டு அல்லது மூன்று நாள் பனிக்கட்டி சிகிச்சைக்கு பின்பு மீதமான சுடுநீரினால் முதுகுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். சரியான நிலையில் படுப்பதும், உட்காருவதும் மிகவும் அவசியம். உதாரணத்துக்கு தூங்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்து, கால் மூட்டுகளுக்கு இடையே சிறிய தலையணையை வைத்து, கால்மூட்டுகள் சிறிது மடங்கிய நிலையில் படுக்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.

குதிகால் உயர்ந்த காலணிகள் பயன்படுத்துவதை தவிர்த்து பஞ்சு போன்ற மிருதுவான காலணிகளை பயன்படுத்துவதும் நல்லது. தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதையும், உட்கார்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். பொருட்களை தரையிலிருந்து குனிந்து எடுக்கும்போது முதுகெலும்பை முன்னோக்கி வளைக்காமல் கால்முட்டியை மடக்கி எடுக்க வேண்டும்.

மிக அரிதாக முதுகு எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு (Disc) விலகுவதால் ஒரு காலிலோ அல்லது இரண்டு கால்களிலோ கடுமையான நரம்பு வலி ஏற்படும். மேலும் கால்கள் மரத்துப்போகவோ அல்லது பலம் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். மேற்காணும் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்தமருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

கனமான பொருட்களைத் தூக்கும்போது கால்களை மடக்கி முதுகெலும்பை வளைக்காமல் தூக்க வேண்டும். அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் உள்ள செருப்புகள் பயன்படுத்துவதை தவிர்த்து, தட்டையான மிகவும் மென்மையான செருப்பை பயன்படுத்தலாம். கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.201612311059274209 Back pain comes to women during pregnancy SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button