பழரச வகைகள்

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸை அருந்தலாம். இப்போது இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்
தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 1
வாழைத்தண்டு – 1 துண்டு
உப்பு – சுவைக்கு
மிளகுத்தூள் – 1 சிட்டிகை.
கொத்துமல்லி – சில இலைகள்

செய்முறை :

* வெள்ளரிக்காயை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* வாழைத்தண்டின் நரை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* நறுக்கிய வெள்ளரிக்காய், வாழைத்தண்டை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டவும்.

* வடிகட்டிய ஜூஸில் உப்பு, மிளகுத்தூள், கொத்துமல்லி இலைகள் சேர்த்து அருந்தவும்.

* வெயில் காலத்தில் இந்த ஜூஸ் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.201701021027581890 banana stem stem Cucumber juice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button