தலைமுடி சிகிச்சை

வெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்!!

நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம்.

நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

அவுரி + மருதாணி :
அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நெறத்தில் மாறும்.

தேயிலை மாஸ்க் :
தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் த்டவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கறுமையாக மாறும்.

பிராமி + கருவேப்பிலை :
ஒரு கொத்து கருவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகிய்வற்றை கலந்து அரைத்துக் கொள்ளுங்கல். இந்த கலவையை உங்கள் வேர்கால்களில் படும்படி தலையில் தடவுங்கள். 1 மனி நேரம் கழித்து தலைக்கு தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகித்து குளிக்கவும். வாரம் 2 முறை பயனளிக்கும்.

தேங்காய் எண்ணெய் + எலுமிச்சை சாறு :
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். இது தலையில் ராசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியை கருமையாக்குகிறது. வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கட்டாயம் மாறும்

நெல்லிக்காய் எண்ணெய் :
ஒரு இரும்பு வாணிலியில் 1 கப் நெல்லிக்காய் பொடியை வறுங்கள். அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெயை விடவும். அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்திருங்கள். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இந்த எண்ணையை குளிர வைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருங்கள். பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகிவிடும்.
29 1472446726 indogo

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button