ஆரோக்கிய உணவு

சத்தான சுவையான சப்ஜா குல்கந்து பால்

வயிற்று உபாதை, சிறுநீர் எரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதை, பாதாம் பிசினை சாப்பிடலாம். இப்போது சப்ஜா குல்கந்து பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான சப்ஜா குல்கந்து பால்
தேவையான பொருட்கள் :

சப்ஜா விதை – 2 தேக்கரண்டி
பாதாம் பிசின் – 100 கிராம்
பால் – 500 மி.லி.
ரோஜா குல்கந்து – 4 தேக்கரண்டி

செய்முறை :

* பாதாம் பிசினை 300 மி.லி. நீரில் ஐந்து மணி நேரம் ஊறவையுங்கள்.

* சப்ஜா விதையை 20 நிமிடம் ஊற வையுங்கள்.

* பாலை நன்கு காய்ச்சி, அத்துடன் ஊற வைத்துள்ள பாதாம் பிசின், சப்ஜா விதையை சேருங்கள்.

* கடைசியாக குல்கந்தை கலந்து பரிமாறுங்கள்.

* சத்தான, சுவையான சப்ஜா பால் ரெடி.

* கோடை காலத்தில் குழந்தைகளுக்கும் ஏற்றது. சிறுநீர் எரிச்சல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும்.
201701040852412456 sabja gulkand milk SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button