உதடு பராமரிப்பு

உதடுகளில் ஏற்படும் கருமையை எப்படி போக்குவது?

உதடுகள் சருமத்தை விட எளிதில் கருப்பாகிவிடும். ஆனால் எளிதில் போகாது. அதேபோல் மிக மெல்லிய சருமம் இருப்பதால் எளிதில் வெடிக்க ஆரம்பித்து விடும். குளிரோ வெயிலோ, சருமத்தை காட்டிலும் உதடுகள் வெடிக்க ஆரம்பித்துவிடும்.

லிப்ஸ்டிக் போட்டு நமது உதட்டின் கருமை மறைத்தாலும், லிப்ஸ்டிக் இல்லாமல் வெளியே வர முடியாத நிலைமைக்கு வந்துவிடுகிறோம். லிப்ஸ்டிக் போடுவதால் அதிலுள்ள கெமிக்கல் உதட்டை இன்னும் கருப்பாக்கிவிடுகிறோம்.

உங்கள் உதட்டை மென்மையாக்கி மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் தொடர்ந்து நீங்கள் இயற்கையான பொருட்களை உங்கள் உதட்டிற்கு உபயோகித்து வந்தால், சிவந்த நிறத்தில் மிருதுவான உதடுகள் கிடைத்துவிடும். எப்படி என பார்க்கலாமா?

ஸ்க்ரப் செய்யுங்கள் : சருமத்திலுள்ள துவாரங்கள் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் அழுக்களை வெளியேற்றி விடலாம். ஆனால் உதடுகளில் வியர்ப்பது இல்லை. எனவே இறந்த செல்கள் வெளியேற வாய்ப்பில்லை. வாரம் இருமுறை சர்க்கரை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் 1 தேனை கலந்து உதட்டை தேயுங்கள். இதனால் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு சொரசொரப்பு போய், மிருதுவாகும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறில் ஒரு பஞ்சை நனைத்து உதட்டில் தினமும் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். ஒரே வாரத்தில் கருமை மறைந்து பளிச்சிடும்.

ரோஜா இதழ் : ரோஜா இதழை பேஸ்ட் போல் மசித்து அதனுடன் தேன் கலந்து உதட்டில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது வறண்ட உதட்டிற்கு நல்ல பலனைத் தரும்.

மாதுளை : மாதுளையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இதிலுள்ள நிறமிகள் உதட்டிற்கு சிவந்த நிறத்தை தருகிறது. கருமையை போக்கிவிடும். மாதுளையை அரைத்து அதனை உதட்டிற்கு பூசி வரலாம். அல்லது மாதுளை சாறினை இரவு தூங்கும் முன் பூசி வாருங்கள். தினமும் பூசி வந்தால் மாதுளையின் நிறத்திற்கு உங்கள் உதடுகள் மாறும்.

குங்குமப் பூ : குங்குமப் பூவை பொடி செய்து அதனைஒரு துளி நீரில் ஊற விடுங்கள். ஊறியபின் அந்த நீரை எடுத்து உதட்டில் பூசுங்கள். லிப்ஸ்டிக் தோற்று போகும் .தினமும் பூசி வாருங்கள் உதடுகள் சிவப்பேறிவிடும்.

பீட்ரூட் : தினமும் இரு வேளை பீட்ரூட் சாறை எடுத்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் சிவந்து, மென்மையாக மாறும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உதட்டில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்கின்றன.

Related posts

லிப் லைனர் உபயோகிக்கவும்

nathan

சூப்பர் டிப்ஸ் கருகருவென இருக்கும் உதடுகளின் நிறத்தை ரோஸ் நிறமாக்க….

nathan

உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள!…

sangika

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: