கை பராமரிப்பு

அக்குளில் கருமை விடுபட 10 பயனுள்ள குறிப்புகள்!

இன்றைய பேஷன் உலகில் பெரும்பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இதனால் பலர் அக்குள்களை வெள்ளையாக்க அதிகம் பணம் செலவழிக்கின்றனர். இந்த மாதிரியான சிகிச்சையை பணம் இருப்பவர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதுவே பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அத்தகையவர்களுக்காகதான் குறைந்த செலவில், இயற்கையான முறையில் பக்க விளைவுகள் ஏதுமின்றி கருமையான அக்குளை வெள்ளையாக்கும் பத்து இயற்கை முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்துங்கள் கருமையான அக்குளில் இருந்து விடுபடுங்கள்.

அதிமதுரவேர்

அதிமதுர வேரை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதனை அக்குளின் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைக்க வேண்டும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

எலுமிச்சை

எலுமி்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து ஊறவைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி அக்குள் வெள்ளையாவதோடு அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

கற்றாழை

கற்றாலையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து பின் நீரில் கழுவவேண்டும். இதை தினமும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி அக்குள் வெள்ளையாகிவிடும்.

மஞ்சள், தயிர்

இயற்கையாகவே மஞ்சள் மற்றும் தயிரில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே முகத்தில் உள்ள கருமையைப் போக்க மஞ்சளை தயிரில் கலந்து அக்குளில் தேய்த்து ஊறைவத்து கழுவினால் அக்குள் கருமையை நிச்சயம் போக்கிவிடும்.

தயிர் எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து அரை கப் சாறு எடுத்து அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து அக்குளில் தடவி சிறிதுநேரம் ஸ்கரப் செய்து 10-15 நிமிடம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

சந்தனப்பவுடர் பால்

சந்தனப்பவுடரை பால் ஊற்றி குலைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அக்குளில் தடவி காய வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால் அக்குள் வெள்ளையாகும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து பின் குளித்தால் கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்

கடலைமாவு, மஞ்சள், பால்

கடலைமாவு, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து குளிக்கும் முன் அக்குளில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து பின் குளித்தால் அக்குள் கருமை நீங்கிவிடும்.
1468654414 7593

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button