மருத்துவ குறிப்பு

ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புச் சிதைவு நோய்!

வீட்டின் கட்டமைப்புக்கு பொறியாளரை அணுகி சிறப்பாக வரவேண்டும் என்று சிரத்தை எடுக்கும் நாம் நம் உடல் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தருகிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்வேன். தொடர் போராட்டம் மிக்க வாழ்க்கை ஓய்வற்ற வேலைப்பளு என்று பல்வேறு காரணங்கள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் எடுத்துகொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக சொற்பமே. ஏன் இல்லை என்றே சொல்லலாம்.

உடல் கட்டமைப்பை எந்த பகுதி தாங்கி கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு அனைவருக்கும் தெரியும் ஆம், உங்கள் உடல் எலும்புகளே உங்கள் உடல் கட்டமைப்பை(INFRASTRUCTURE) தாங்கி பிடித்திக் கொண்டும் நிர்வகித்து கொண்டும் இருக்கிறது. உங்கள் உயரம் கைகளின் நீளம் கால்களின் நீளம் அனைத்தும் வடிவங்களும் பொதிந்து வைத்திருப்பது உங்கள் உடல் எலும்புகள். 206 எலும்புகளே! மனித உடலமைப்பு ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் அதன் உறுதித்தன்மையை நிர்ணியம் செய்கிறது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வின் கோட்பாடு உண்மையெனில் உங்கள் தண்டுவட எலும்புகளும் கால் எலும்புகளும் பல்வேறு மாற்றத்திற்கு உள்ளான பின் நாம் இரண்டு கால்களில் நடக்கும் மனிதனாக உருபெற்றோம். இரண்டு கால்களில் மனிதன் எப்பொழுது நடக்க ஆரம்பித்தோமோ நம் தொடை எலும்புகளின் வலுவும் இன்னும் மற்ற எலும்புகளின் எலும்புகளின் தேவை நமக்கு இன்றியமையாததாகிறது.

எலும்புகள் உடல் கட்டமைப்பு மட்டுமே உதவுகிறது என்றால் அது நிச்சயாமாக உணமையில்லை. உடலின் பல்வேறு இயக்கங்கங்கள் நம் உடல் எடையை தாங்கிக் கொள்ளுதல், வெள்ளை அணுக்கள் உற்பத்தி என்று பல்வேறு தனிப்பட்ட முக்கிய வேலைகளை சீரும் சிறப்புமாக அன்றாடம் செய்து கொண்டேயிருக்கிறது. உதராணமாக உங்கள் வீட்டில் இருக்கும் மேஜை நீங்கள் வைக்கும் புத்தகம் அல்லது இன்னும் பிற பொருட்களின் எடையை தாங்க வேண்டும் என்றால் அதன் கால்கள் மிகுந்த உறுதியுடன் இருக்க வேண்டுமல்லவா. அதே போல் அந்த மர கால்கள் செய்யப்பட்ட பலகை நல்ல நலத்துடன் இருக்க வேண்டுமல்லவா. ஆம் எனில் நீங்கள் உங்கள் உடல் எலும்புகளின் எடையை உறுதியாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் சுமார் உங்கள் 55 கிலோ எடையை தாங்கிக்கொள்ள உங்கள் கால், முதுகு, தண்டுவட எலும்புகள் உறுதியுடன் இருக்க வேண்டுமே. ஆனால் மருத்துவ ஆய்விகளின் படி நமக்கு எலும்புகள் 55 வயதுக்கு பின்பு உறுதி தன்மையை இழக்க ஆரம்பித்து விடுகிறது. உறுதித்தன்மை இழப்பதால் அதன் நிலைத்தன்மை இழக்க நேரிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் (OSTEOPOROSIS) எலும்பு மெலிதல் அல்லது எலும்பு சிதைவு நோய் என்கிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது, இதனை மருத்துவர்களும் பல்வேறு உடல் பரிசோதனைகள் மூலம் உறுதிபடுத்தி வருகின்றனர்.

மருத்துவ ஆய்வறிக்கைகளின் படி உலகில் வாழும் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் தாக்குவதாகவும், அதேபோல் ஆண்களில் 5 இல் ஒருவருக்கு இந்த நோய் தாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. (F = 1:3, M = 1:5). மருத்துவத்துறை இதனை சைலென்ட் டிசீஸ் (SILENT DISEASE) என்கிறது. அதாவது இந்த நோய் கண்டறிந்த எவருக்கும் நோயின் தொடர் விளைவுகளோ அல்லது நோயின் வீரியமோ அறிந்து கொள்ள வெளியில் உணரும் வண்ணம் எந்த நோய் அறிகுறிகளும் தெரியாது. இதனால் நோய் பாதிக்கபட்டவர்கள், அதாவது பெண்களை அதிகம் தாக்கும் இந்த எலும்புச் சிதைவு குறைபாடு (இது ஒரு நோய் அல்ல) அவர்களின் எலும்புகளை நிலைத்தன்மையும் உறுதித்தன்மையும் நாளாக நாளாக சீர் குலைத்து எலும்புகளைச் மெலியச் செய்து ஒரு நாள் எளிதில் உடைந்து போகச் செய்கிறது. நாளுக்கு நாள் நம் வயது முதிரும் பொழுது எலும்புகள் நொறுங்கி போதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆம் இந்த நோயால் பாதிக்கக்பட்டவரின் எலும்புகள் எளிதில் உடைந்து போகும் (FRACTURE). தொடை எலும்புகள்(FEMUR) மற்றும் இடுப்பு எலும்புகள் எளிதில் உடைந்து போக நேரிடுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் பக்க விளைவுகள் மிக அதிகம்.

அதே போல் முதுகு எலும்புகள் கடுமையாக இந்த நோயால் பாதிக்கப்படும் பொழுது உடல் முதுகு குருத்தெலும்புகள் உறுதித்தன்மையை இழந்து கூன் விழ ஆரம்பித்துவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் HUMP/KYPHOSIS என்பார்கள். இதனால் தான் வயது முதிர்ந்தவர்களுக்கு கூன் விழுவது என்பது பொதுவான ஒரு விளைவாகிறது. நாள்பட்ட நோயின் தாக்கம் உடல் கட்டமைப்பை ஆட்டம் காணச் செய்யும்போது உடலில் தடுமாற்றம், நடுக்கம், தசைச் சேர்வு, விழுந்து விடுவோமோ என்ற பயம் (FEAR OF FALL) தொடர் விளைவுகளால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் படுத்த படுக்கையாக நேரிடுகிறது. இதனைத்தொடர்ந்து படுக்கையில் அதிகம் ஓய்வு எடுக்க நேரிடும் பொழுது தொடர் நோய்கள் தாக்கி உயிரழப்பை ஏற்படுத்தும் என்கிறது தொடரும் மருத்துவ ஆய்வுகள்.

மக்களும் மனித சமூகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக ஆஸ்டியோபோரோசிஸ் நாள் அக்டோபர் 20-ம் தேதி கொண்டாப்படுகிறது. இந்த நாள் கொண்டாப்படுவதின் முக்கிய நோக்கம் அனைவரும் இந்த நோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். தொடர் உடற்பயிற்சிகள் நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், கால்சியம் நிறைந்த கீரை வகைகள், காய்கறிகள், தானியங்கள், உணவு முறைகளில் கட்டுப்பாடு, சூரிய ஒளியின் முக்கியத்துவம் உணர்ந்து உடலில் சூரிய ஒளி படும்படி சிறிது நேரம் நடக்கும் உடற்பயிற்சிகள் இது போன்ற சின்ன சின்ன வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த எலும்புகளில் ஏற்படும் குறைபாட்டை தடுத்து கொள்ளவும், நோயின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவித்து கொள்ள பெரிதும் உதவுகிறது.landscape 1445711467 g osteoporosis 103060411

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button