சைவம்

தக்காளி – உருளைக்கிழங்கு கிரேவி

சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சூப்பரான விரைவில் செய்யக்கூடிய தக்காளி – உருளைக்கிழங்கு கிரேவி செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

தக்காளி – உருளைக்கிழங்கு கிரேவி
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 2,
தக்காளி – 2,
சீரகம் – கால் டீஸ்பூன்,
சீரகத்தூள் – – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – – அரை டீஸ்பூன்,
தனியாத்தூள் – – அரை டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* கொத்தமல்லி, தக்காளி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி, உருளைக்கிழங்கு நன்றாக வதங்கி வரும் போது அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான தக்காளி – உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.

* இது சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.201701061033532307 Tomato potato gravy SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button