மருத்துவ குறிப்பு

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை குணமாக்க கூடியதும், நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடியதுமான வசம்பு குறித்து இன்று நாம் பார்ப்போம்.

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு
வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோடு நுண்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.

பல்வேறு மருத்துவ குணங்களை உடைய வசம்புவை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து குழந்தையின் நாவில் தடவும் வழக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி சரியாகும். ஞாபக சக்தி கூடும். நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடிய வசம்பானது வலியை போக்கவல்லது. பதட்டத்தை தணிக்க கூடியது. நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் வசம்பு, இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும். ரத்தத்தை சுத்தப்படும்.

* இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது வசம்பு.

* வசம்பின் வேரும், அடிநிலமட்டத் தண்டும், இலை, பூ ஆகியவையும் பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களைக் கரைத்திடும் மருந்தாகப் பயன்படுகிறது.

* வசம்புத் தாளை அரைத்து வெட்டுக் காயத்தின் மேல் கட்ட காயம் ஆறிவிடும்.

* வசம்பை சுட்டுத் தூளாக்கி சுக்கு தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.

* நீரில் வசம்புத் தாள்களை சிறுசிறு துண்டுகளாக்கி போட்டு அரைமணி நேரம் கழித்து நீக்கிவிட்டு அந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால், தோல் நோய்கள் அண்டாது.

* சிறிதளவு வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தர, காய்ச்சல் குணமாகும். திடீர் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் காலை, மாலை வேளைகளில் வசம்பைப் பொடியாக்கி, அரை ஸ்பூன் தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர, 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* வசம்பை சுட்டு உரைத்து, குழந்தைகளைக் குளிப்பாட்டியதும் கால்களின் அடிப்பாகத்திலும் தொப்புளைச் சுற்றி தடவிவர எந்த நோயும் அண்டாது.

* ஒரு துண்டு வசம்பு, ஒரு துண்டு பனை மஞ்சள் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து அரைத்து பொன்னுக்கு வீங்கி எனப்படும் கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்கம் நோய்க்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.201701061430522717 vasambu acorus calamus rhizome healed Hysteria SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button