சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான சோள அடை

சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சத்துக்கள் நிறைந்த சோளத்தை வைத்து சுவையான சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான சோள அடை
தேவையான பொருட்கள் :

சோளம் – அரை டம்ளர்
கடலைப்பருப்பு – கால் டம்ளர்
துவரம்பருப்பு – கால் டம்ளர்
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறு துண்டு
மிளகாய் வற்றல் – 5
பெரிய வெங்காயம் – ஒன்று
சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு – சிறிது
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

* வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

* சோளம் மற்றும் பருப்பு வகைகளை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்த பின் மிக்ஸியில் போட்டு அதனுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி மேலே எண்ணெய் விட்டு புரட்டி வெந்ததும் எடுக்கவும்.

* சுவையான சோள அடை ரெடி.201701061257395286 corn adai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button