சைவம்

பச்சை சுண்டைக்காய் கார குழம்பு

சுண்டைக்காய் கார குழம்பு சூப்பராக இருக்கும். பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் வைத்து கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பச்சை சுண்டைக்காய் கார குழம்பு
தேவையான பொருட்கள் :

பச்சை சுண்டைக்காய்,
சின்ன வெங்காயம் – தலா 10,
கீறிய பச்சை மிளகாய் – 2,
கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
தக்காளி – 2,
வேகவைத்து, மசித்த துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* பச்சை சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி, தயிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

* தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.

* மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் ஊறவைத்த சுண்டைக்காயை தயிர் நீக்கி சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

* இப்போது புளிக்கரைசல், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு சேர்த்து, நன்றாக கொதி வந்த பின் கொத்தமல்லித்தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.

* பச்சை சுண்டைக்காய் குழம்பு ரெடி.201701071039152803 raw sundakkai vathal kuzhambu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button