ஆரோக்கியம் குறிப்புகள்

மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க தரமான சானிட்டரி பேட் உபயோகியுங்க

மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிகுந்த வேதனையை தரும் காலமாக அமைகின்றது. உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும் ஈரமாக இருக்கும். இரத்தப் போக்கும் சராசரியாக மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இருக்கும்.

இந்த ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல் உரிந்து அரிப்பு, சொறி ஆகியவை ஏற்படலாம். சிவப்பு நிற புண்களும் வர வாய்ப்புகள் உள்ளன. அவை வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இவை மிகுந்த வலியை தருவதாக அமைகின்றது. சொறி மற்றும் புண்களால் மிகுந்த அரிப்பு ஏற்படுகின்றது. இதனால் அந்த இடங்களில் இறுக்கமான ஆடைகளை அணியமுடிவதில்லை. நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் இத்தகைய பிரச்சனைகள் வருவது இயல்பு.

ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும். நமது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நாம் பராமரித்தால் எந்த ஒரு சொறியும் அரிப்பும் அண்ட முடியாது. இதுவே முதல் குறிப்பாகும். அவ்வப்போது அந்த இடங்களை கழுவி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியமாகும். நிறைய தண்ணீரைப் பயன்படுத்துங்கள். இவை நுண் கிருமிகளிலிருந்து உங்களை பாதுகாக்கும். அந்த இடத்தை கழுவி மற்றும் சுத்தமாக துடைத்த பின், சானிட்டரி பேட் அல்லது துணி என எதுவாக இருந்தாலும் அவ்வப்போது அதை மாற்றுவது சிறந்தது.

ஒரே சானிட்டரி பேட் அல்லது துணியை 8-9 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவது சுகாதாரமற்றதாகும். இப்படி நாம் பயன்படுத்தும் போது தான் சொறி மற்றும் புண் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் அவ்வப்போது அவற்றை மாற்ற மறந்து விடாதீர்கள். அதை மாற்றும் போதும், நன்கு கழுவி துடைத்த பின்னும் புதிய சானிட்டரி பேடை பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெற முடியும். இந்த சானிட்டரி பேட் அல்லது நாப்கின்களை குறித்த காலத்தில் தவறாமல் மாற்றி அரிப்புகள் ஏற்படாத பீரியட்களை எதிர்கொள்ளுங்கள்.

பெண்கள் இப்போது வீட்டிலேயே முடங்கி இருப்பது கிடையாது. அவர்களும் வேலை மற்றும் இதர காரியங்களில் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இதனால் மாதவிடாய் காலத்தில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பயன்படுத்தும் துணி மற்றம் சானிட்டரி பேட் ஆகியவை தோலில் உராய்ந்து வெடிப்புக்களை ஏற்படுத்துகின்றன. அதனால் தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் காயங்கள் உண்டாகின்றன. ஆகையால் சானிட்டரி பேட் தேர்ந்தெடுக்கும் போது மென்மையான மற்றும் சிறந்த தரம் கொண்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லதாகும்.

சானிட்டரி பேட் ஜெல் மற்றும் பருத்தியால் செய்யப்பட்டு வினியோகமாகி வருகின்றன. பருத்தியால் செய்யப்பட்டதை பயன்படுத்தும் போது அதை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் அவை சிறந்ததாகும். நல்ல தரமான பேட்கள் உங்களுக்கு அரிப்புகள் இல்லாத பீரியட்களை கொடுக்கும்.28 1406523054 10menstruation

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button