30.6 C
Chennai
Saturday, May 18, 2024
44444
மருத்துவ குறிப்பு

ரத்தச்சோகையைத் தீர்க்கும் முருங்கை இலைப் பொடி!

முருங்கை இலைப் பொடி

தேவையானவை: முருங்கை இலை – 1 கப், வெள்ளை எள்ளு, உளுத்தம் பருப்பு – தலா 1/4 கப், சிவப்பு மிளகாய் – 10, பூண்டு – 5 பற்கள், புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

44444

செய்முறை: முருங்கை இலையைச் சுத்தம்செய்து, கழுவி நிழலிலே வெள்ளைத் துணியில் போட்டு உலர்த்த வேண்டும். வெயிலில் காயவைத்தால், பச்சை நிறம் நீங்கிவிடும். முருங்கை இலை மொறுமொறுப்பான பதத்துக்குக் காய்ந்த பின்னர், தவாவில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய், வெள்ளை எள்ளு, பூண்டு, புளி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், காய்ந்த முருங்கை இலையுடன் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடியாக அரைத்தால், முருங்கை இலைப் பொடி தயார். இட்லி பொடிக்குப் பதிலாக இதைத் தொட்டுச் சாப்பிடலாம்.

பலன்கள்: இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன. பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் எல்லோருக்கும் ஏற்றது. சருமத்துக்கு நல்லது. ரத்தச்சோகையைத் தீர்க்கும். கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட இந்தப் பொடியை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Related posts

வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

நோய் நீக்கும் துளசிமாலை

nathan

பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா

nathan

காதலரை சந்திக்க செல்லும் முன் கவனிக்க வேண்டிவை

nathan

பற்களில் படியும் டீ கறைகளைப் போக்க சில டிப்ஸ், beauty tips in tamil

nathan

பசியை தூண்டும் சீரகம்

nathan

தெரிஞ்சிக்கங்க…வேப்ப எண்ணெயில் இவ்வளவு பலன் இருக்கா?

nathan

ஒயின் குடித்தால் சருமம் பளபளக்குமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை வியாதியை இரண்டே வாரத்தில் விரட்ட முடியும்…

nathan