27.5 C
Chennai
Friday, May 17, 2024
sl4488
சிற்றுண்டி வகைகள்

மூங்தால் தஹி வடா

என்னென்ன தேவை?

பயத்தம்பருப்பு – 1 கப்,
கடைந்த கட்டித் தயிர் – 2 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு,
மிளகாய்த் தூள் – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – சிறிது.

பொடிக்க…

சுக்கு, மிளகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.

அலங்கரிக்க…

கருப்பு உப்பு – தேவைக்கு. பொடித்து தயிர் வடையின் மேல் தூவ.


எப்படிச் செய்வது?

பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து வடித்து வடை மாவு போல் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கையால் தண்ணீரைத் தொட்டு மாவை விருப்பமான வடிவத்தில் போண்டாவாக, வடையாக பொரித்தெடுக்கவும். பின் வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் ஒரு தட்டில் அடுக்கி, கடைந்த தயிரை அதன் மேல் ஊற்றி உப்பு, மிளகாய்த்தூள், பொடித்த மசாலாத்தூள் தூவி, விருப்பப்பட்டால் தக்காளி சாஸ் அல்லது இனிப்பு, புளிப்பு சட்னி, பச்சை சட்னி சேர்த்து பரிமாறவும். சிறிது குளிர வைத்தும் பரிமாறலாம்.

குறிப்பு: மாவை அரைத்த உடனேயே வடை போடவும். புளிக்கவிட வேண்டாம். மாவை கரண்டியால் கலக்க வேண்டாம். அப்படியே எடுத்துப்போடவும். உப்பை மாவில் போடாமல் தயிரில் கலந்து போடவும். விருப்பப்பட்டால் தயிரில் பெருங்காயம் சேர்க்கலாம். மார்வாடிகளின் தயிர் வடை இதுதான்.sl4488

Related posts

அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!

nathan

ஓட்ஸ் – கோதுமை ரவை ஊத்தப்பம்

nathan

வாழைப்பழம் கோதுமை தோசை

nathan

பிடி கொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

nathan

சுவையான… ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

சுவையான சத்தான கம்பு புட்டு

nathan

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

சோயா வெஜ் நூடுல்ஸ் / Soya Veg Noodles

nathan