மருத்துவ குறிப்பு

ஃபேஸ்புக்கை டீ ஆக்டிவேட் செய்தாலும் மெஸெஞ்சரில் சாட் செய்யலாம் எப்படி?

ஹைலைட்ஸ்:

1) உங்கள் ஃபேஸ்புக் கணக்கை டீ ஆக்டிவேட் செய்த பின்னாலும் மெஸெஞ்சர் மூலம் நண்பர்களிடம் சாட் செய்யலாம்

2) ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட்டே இல்லையென்றாலும் ஃபேஸ்புக் மெஸெஞ்சரை பயன்படுத்தலாம்.

உலகம் எங்கும் 2017 புத்தாண்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தொகுத்துப் பார்த்தால் “ஃபேஸ்புக்குக்கு வர மாட்டேன்” என எடுக்கப்பட்டவைதான் முதலிடத்தில் இருக்கும்.

facebook 257829 960 720 18069

வீட்டில் இருக்கும் நேரத்தை விட, அலுவலகத்தில் இருக்கும் நேரத்தை விட ஃபேஸ்புக்கில் இருக்கும் நேரமே அதிகம். காதலி தொடங்கி கடன்காரன் வரை பாரபட்சம் பார்க்காமல் லைக் போடும் இடம் ஃபேஸ்புக். ஆனால், அதுவே பலருக்கு பிரச்னை ஆவதால் ஃபேஸ்புக்கில் இருந்து துறவறம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மெயில் எல்லாம் காலாவதி ஆகிவிட்ட காலம். ஒருவரை தொடர்புக்கொள்ள சிறந்த வழியாக ஃபேஸ்புக் மெஸெஞ்சர் இருந்து வருகிறது. அனைத்து காண்டாக்ட்டையும் அங்கே வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை விட்டு எப்படி விலகுவது என கேட்கறீர்களா? அதற்கும் வழி வைத்திருக்கிறார் நம்ம ஜாக். ஃபேஸ்புக் அக்கவுண்ட் டீஆக்டிவேட் செய்தாலும், மெஸெஞ்சர் மட்டும் உயிர்ப்போடு வைத்திருக்க வழி இருக்கிறது.

ஃபேஸ்புக் டீ ஆக்டிவேட் செய்வது எப்படி:

1) முதலில் இந்த ஃபேஸ்புக் டீஆக்டிவேட் பக்கத்துக்கு போகவும்.

2) யாரெல்லாம் உங்களை மிஸ் செய்வார்கள் என ஒரு சூப்பர் லிஸ்ட்டை காட்டும் ஃபேஸ்புக். அவர்களையெல்லாம் மொபைலில் பிடித்துக் கொள்ளலாம். அதனால் அதை கடந்து கீழே செல்லவும்.

3) மற்ற விஷயங்களை விடுங்கள். கடைசியாக Messengerக்கு என ஒரு பாக்ஸ் இருக்கும். அதை டிக் செய்யாமல் விட்டு விடவும்

4) கடைசியாக, Deactivate பட்டனை க்ளிக் செய்யவும்.

fb 18598
அவ்வளவுதான். உங்கள் ஃபேஸ்புக் கணக்கு மூடப்பட்டுவிட்டது. ஆனால், உங்கள் தகவல்களை எல்லாம் பத்திரமாக கொஞ்ச நாட்களுக்கு வைத்திருக்கும் ஃபேஸ்புக். மீண்டும் நீங்கள் லாக் இன் செய்தால், உங்கள் அக்கவுண்ட் உயிர்பெற்று விடும்.

அடுத்து, உங்கள் மொபைலில் மெஸெஞ்சரை திறக்கவும். அல்லது மெஸெஞ்சர் இணையதளத்தை திறக்கவும். டீஆக்டிவேட் செய்யப்பட்ட உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் தகவல்களை வைத்தே இங்கே லாக் இன் செய்யலாம்.

மெஸெஞ்சரில் லாக் இன் செய்வதால் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு மீண்டும் ஆக்டிவேட் ஆகாது என்பதுதான் விஷயம். இதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தோடு தொடர்பில் இருக்கலாம். அதே சமயம் ஃபேஸ்புக்கில் உங்கள் நேரத்தை தொலைக்காமலும் இருக்கலாம்.

இதெல்லாம் வேலைக்காவாது. எனக்கு ஃபேஸ்புக் உறவே வேண்டாம். ஆனால், ஃபேஸ்புக் மெஸெஞ்சர் மட்டும் வேண்டும் என்கிறீர்களா? அதற்கும் வழி இருக்கிறது.

1) ப்ளே ஸ்டோரிலோ அல்லது ஆப்பிள் ஸ்டோரிலோ மெஸெஞ்சர் ஆப்-ஐ டெளன்லோடு செய்துகொள்ளவும்

2) ஆப்-ஐ திறந்து உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும்

3) Continue பட்டனை க்ளிக் செய்யவும்

4) உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்ய ஒரு SMS வரும். அதை வைத்து வெரிஃபை செய்யவும்

5) உறுதி செய்ததும் மெஸெஞ்சர் மூலம் உங்கள் நண்பர்களுடம் சாட் செய்யலாம்.

ஃபேஸ்புக் கணக்குக்கு மட்டும் இல்லாமல், இந்த மெஸெஞ்சர் மூலம் மொபைல் குறுஞ்செய்திகள் அப்ளிகேஷனையும் இணைத்துக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button